தேங்காய் வியாபாரிகளுக்கான பில்லிங் ஆப்
CoCo Billing தேங்காய் வியாபாரத்துக்கென்றே உருவாக்கப்பட்ட பில்லிங் மற்றும் கணக்கு ஆப். விவசாயிடம் தேங்காய் வாங்குவது முதல் மில் அல்லது மார்க்கெட்டுக்கு GST பில் போடுவது வரை எல்லாம் ஒரே இடத்தில் — Android போனிலும் கம்ப்யூட்டரிலும், தமிழிலும் ஆங்கிலத்திலும்.
விவசாயிடம் தேங்காய் வாங்குதல்
- உரி மற்றும் கை கணக்கில் கொள்முதல் பில் — A கிரேடு, B கிரேடு, உரிக்கு இலவச கை
- கூலி, உரிப்பு, வண்டி செலவுகள் ஒவ்வொரு பில்லிலும்
- GPay, PhonePe அல்லது ரொக்கமாக பணம் — யாருக்கு எவ்வளவு பாக்கி என்று உடனே தெரியும்
விற்பனை மற்றும் GST
- GST பில் / Bill of Supply, தேங்காய் பொருட்களுக்கான HSN கோடுடன்
- WhatsApp-ல் பில் அனுப்பலாம், PDF ஆக சேமிக்கலாம்
- GSTR-1, GSTR-3B கணக்குகள் தயார்
ஸ்டாக், செலவு, லாபம்
- தேங்காய், கொப்பரை, நார், ஓடு, மட்டை, எண்ணெய் — எல்லா ஸ்டாக்கும் நேரலையில்
- ஒரு தேங்காயின் உண்மையான அடக்க விலை, ஒவ்வொரு விற்பனையின் லாபம்
- தினசரி தேங்காய், கொப்பரை, எண்ணெய் சந்தை விலை
விலை
நீங்கள் வாங்கும் / விற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மாதம் ₹99; எல்லா பொருட்களுக்கும் சேர்த்து அதிகபட்சம் மாதம் ₹499.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உரி கணக்கு எப்படி போடுவது?
ஒரு உரி = 100 கை. A கிரேடுக்கு ஒரு கைக்கு 2 தேங்காய், B கிரேடுக்கு 1 தேங்காய் கணக்கில் விவசாயிக்கு பணம்; உரிக்கு இலவச கைகள் ஸ்டாக்கில் சேரும். CoCo Billing இதை தானாக கணக்கிடும்.
இந்த ஆப் தமிழில் இருக்கிறதா?
ஆம். CoCo Billing தமிழிலும் ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம் — Android ஆப்பிலும் இணையத்திலும்.